/* ]]> */
Nov 202011
 

அரசியல் செய்திகள்:

seeman

seeman

1.      சமீபத்தில் நியூயார்க் செல்லத்  திட்டமிட்டு விசாவுடன் அங்குபோய்ச் சேர்ந்து விமான நிலையத்தில் இறங்கிய சீமானை ஏர்ப்போர்ட்டில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவருடைய விசா  கேன்சலாகிவிட்டதாகத் திருப்பி அனுப்பிவிட்டனர். சீமான், ஒருமுறை தமிழ்நாட்டில் சிறையில் இருந்ததையும், கனடா நாட்டில் ஒருமுறை கைவிலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதையும் காரணமாகக் குறிப்பிட்டார்களாம். “ நீங்கள் புலிகள் தொடர்பு உள்ளவரா? எனவும் வினவினார்களாம். கோபமுற்ற சீமான், “ விமானம் ஏறும்வரை மறுக்கப்படாமலிருந்த விசா அமெரிக்கா வந்திறங்கியதும் மறுக்கப்பட்டதெப்படி? ஒரு போர்க்குற்றவாளியால் போய்வரமுடியும் நாட்டுக்கு நான் போவதில் என்ன தவறு?” என்று குமுறல் வெடிக்கிறது. நியூயார்க்கில் இவர் பேசுவதாக இருந்த மீட்டிங்கில் இவரைப் பேசவிடாமல் செய்யவே இந்த சதி என்பதும் சீமானின் எண்ணம். சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்னவாக இருக்கும்?

2.       சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்று ‘ அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்துவிட்டு அந்த இடத்தில், குழந்தைகள் நல மருத்துவ மனை கொண்டுவரப்போவதாக வெளியிடப்பட்டிருந்தது.  செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியுற்றனர். அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், புத்தகப்பிரியர்களும் அனுதினமும் ஆர்வத்துடன் கூடும் இந்த நூலகத்தை  மாற்ற எப்படி மனம் வந்தது என்று இன்னும் வியந்து  கொண்டுள்ளனர். புத்தகம் வாங்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பெரிதும் பயன்பட்ட இந்த நூலகத்தை மாற்றக்கூடாது என்று போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்துவது மட்டுமல்ல; உயர்நீதிமன்றம் சென்று ஒரு தடை  உத்தரவும் வாங்கிவிட்டனர். ஆனால், அரசு, உச்ச நீதிமன்றம் செல்லாமலிருக்குமா? அண்ணாவின் நினவைச் சொல்லிக்கொண்டு  பிழைக்குமா, நூலகம்?

இன்னொரு முக்கியமான விஷயம்: குழந்தைகள் மருத்துவமனை தற்போது எக்மோரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் இப்போது எந்தவித வசதிகளுமின்றி இருக்கிறது. ஒரு எம்.ஆர்.ஐ.  ஸ்கேன் வசதிகூட இல்லையாம். போதுமான மருத்துவர்களும்  கிடையாதாம். தேவைப்படும் உபகரணங்களோ, பழுதானவைகளை ரிப்பேர் செய்வதோ கிடையாதாம்.  எனவே இவற்றையெல்லாம் சரிப்படுத்தி, நல்ல சம்பளம் கொடுத்து, தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் மருத்துவர்களை   இங்கு பணியில் அமர்த்தினால், இந்த குழந்தை நல மருத்துவமனை சிறப்புறும். அதோடு , குழந்தை மருத்துவமனை எப்போதும் பொது மருத்துவமனைக்கு அருகில் இருக்கவேண்டும். இபப்போது  அத்தகு இடத்தில் சரியாக அமைக்கப்பட்டிருக்கும் குழந்தை மருத்துவ மனையை அப்படியே விட்டுவிட்டு திருச்சியிலோ, அல்லது மதுரையிலோ புதிதாக ஒரு குழந்தைகள் மருத்துவமனையை அமைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இத்தனையும் சீர் தூக்கிப் பார்த்து  ஒரு கல்விப் பிரதேசம் காப்பாற்றப்படுமா?

ஒரே அழுகுரலும் ஓலமுமாக  13,500  கிராம நல ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இவர்களுக்குப் பின்னால் இருக்கும் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேல், எல்லோரும் இப்போது நடுத்தெருவில் நின்று  போராட்டம் நடத்துகின்றனர். கோர்ட்டுக்கும் செல்ல முடிவெடுத்துள்ளார்கள். அவசரப்பட்ட ஒரு பெண் விஷம் குடித்துவிட்டு மருத்துவமனையில் உயிர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.  புண்ணிய மனம் கொண்டவர்கள் பெரிய மனது பண்ணணும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>