/* ]]> */
Aug 082011
 

அமெரிக்காவுக்கு மீண்டும் AAA ரேட்டிங்க் தந்தது S&P

ஆக்ஸ்ட் 7, சிக்காகோ.

பராக் ஒபாமா

நாடுகளின் சாவரின் க்ரெடிட் ரேட்டிங்கை தீர்மானிக்கும் குழு தலைவரான ஜான் சேம்பர்ஸ் இன்று அமெரிக்காவின் க்ரெடிட் ரேட்டிங்க் மீண்டும் AAA வுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். இரண்டு நாள் முன்புதான்  S&P  அமெரிக்காவுக்கு  AAA  ரேட்டிங்க் இல்லை என தெரிவித்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியது. ஆனால் தற்போது இது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னணியை விசாரித்த போது, அமெரிக்காவுக்கு  AAA ரேட்டிங்க் போனதுமே, ஒபாமா ரீ எவால்யூயேஷனுக்கு அப்ளை செய்து விட்டதாகவும், தன்னுடைய பள்ளி காலத்திலிருந்தே மார்க குறைந்தால் ஒபாமா ரீ எவால்யூயேஷனுக்கு அப்ளை செய்வதை ஒரு வழக்கமாய் கொண்டிருந்ததாகவும் அவர் அவ்வாறு செய்து ஒன்றிரண்டு மார்க்குகள் எக்ஸ்ட்ரா பெறுவார் என்றும் இப்போதும் தான் அவ்வாறே செய்ததாகவும் சொன்னார். ஒபாமா ரீ எவால்யூஷேனக்கு தேவையான இரண்டு செண்டுக்களை கட்டியதுமே குழு மீண்டும் அமர்ந்து அமெரிக்காவுக்கு மீண்டும்  AAA ரேட்டிங்க் வழங்கியது. இதையடுத்து உலகெங்கும் உள்ள ஸ்டாக் மார்கெட்டுகள் எழுச்சியடையும் குறிப்பாக எத்தியோப்பியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பெறும் எழுச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாக் விலைகள் சீலிங்கைத் தாண்டும் என்பதால் எத்தியோப்பியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் ஓலைக் குடிசைகள் அவசர அவசரமாக செப்பனிடப்படுகின்றன.

இது குறித்து குழு தலைவர் ஜான் சேம்பர்ஸ் குறிப்பிடுகையில் முதல்  A  ஆஸ்டரிட்டி அதாவது சிக்கனத்தையும் இரண்டாவது A  அமெரிக்காவையும்  மூண்றாவது A  ஆப்பிளையும் குறிப்பதாக சொன்னார். இதில் மூன்றாவதாக சொன்ன  A ஃபார் ஆப்பிள்  என்பது வருங்காலத்தில் எந்த மாணவனும் தன்னைப்போல் ரீ எவால்யுயேஷனுக்கு அப்ளை செய்யக் கூடாதென ஒபாமா அமெரிக்க கல்வித்திறனை உயர்த்த பாடுபடும் முயற்சியை குறிப்பதாக தெரிவித்தார்.

( செய்தி கப்சாஙண்ணா …. சும்மா டமாசுக்கு ஹி ஹி )

அபி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>