/* ]]> */
Aug 182010
 
க்ரௌண்ட் சீரோ மாஸ்க் என்ற புதிய தலைவலி அமெரிக்காவில் முளைத்திருக்கிறது. அமெரிகாவில் 9 / 11 ல் ஒசாமாபின் லேடனால் நொறுக்கப்பட்ட ட்வின் டவரில் இருந்து இரண்டு ப்ளாக்குகள் தள்ளி  இருக்கும் இடத்தில் கோர்டோபோ ஹவுஸ் கம்யூனிடி சென்டர்  என்ற பெயரில் க்ரௌண்ட் சீரோ மாஸ்க் என்ற இந்த மசூதியை கட்ட முனைந்திருக்கிறது ஒரு தனியார் அமைப்பு. இதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தன் ஆதரவை தெரிவித்துள்ளார்
எல்லா குடிமகன்களுக்கும் நாட்டில் தங்கள் கோவில்களைக் கட்டும் உரிமை உள்ளது. அதுவும் அவர்களுக்கு சொந்தமான தனியார் நிலத்தில் அவர்கள் கோயில் கட்டும் உரிமையை நாம் எப்படி மறுக்க முடியும்? அது ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்படும் உரிமை அல்லவா?” என்று ஒபாமா ஒரு இஃப்தார் விருந்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்கு ரிபப்ளிக்கன்ஸ். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிவேதா செனேட்டர் ஹாரி ரெய்ட் இதற்கு தனது காட்டமான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “அமெரிக்காவின் மக்கள் மனதில் இன்னமும் அந்த ட்வின் டவர்வலி இருக்கிறது. அதனால் இந்த மசூதியை வேறெங்காவது கட்டுவது நல்லதுஎன்று அவர் தெரிவித்துள்ளார்….. சரியாப் போச்சு.. நம்ம ஊர்ல தான் ராமர் கோவில் பாபர் மசூத்ன்னு அடிச்சுக்குறாங்கன்னாஅமெரிக்காவிலும் இதே கதைதானா!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>