/* ]]> */
Feb 032012
 
CRI

ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது…அசால்டாக இருந்திருக்க வேண்டிய வெற்றி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ட்வென்டி - 20  உட்பட ஐந்து போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்திய அணியால் அப்பாடா என்று சொல்லும்படியாகி விட்டது …
முதல் ட்வென்டி - 20  யில் 131 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை அதே 131 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது … ஸ்பின்னர் ராகுல் மற்றும் பிரவீன் குமார் நன்றாக பௌலிங் போட்டிருந்தாலும் இளம் வீரர்களின் துடிப்பான பீல்டிங்கால் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் ஆனதே ஆரம்பத்தில் அடித்து ஆடிய அந்த அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த காரணமாய் அமைந்தது …

முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் இந்த மேட்சில் அதிகபட்சமாக 36  ரன்கள் அடித்தார் … பின்னர் ஆடத்தொடங்கிய இந்திய அணிக்கு கம்பீர் மற்றும் சேவாக் நல்ல துவக்கத்தை கொடுத்தனர் … ஸ்ட்ரைட்டில் சிக்ஸ் அடித்த சேவாக் பின் அதை தக்க வைத்துக்கொள்ளாமல் அவுட் ஆனாலும் கம்பீர் கடைசி வரை நின்று அரை சதம் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார் ….
கோலியும் தன் பங்குக்கு கால் சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார் … சென்ற ட்வென்டி – 20  யில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்த கேப்டன் தோனி இந்த முறை அவுட்டாகாமல் கம்பிருக்கு உறுதுணையாக நின்றார் …
வரிசையான தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வெற்றி ஒரு சின்ன ஆறுதலை கொடுத்திருப்பதோடு அடுத்து பிப்ரவரி ஐந்தில் தொடங்கப்போகும் இந்திய – ஆஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கும்  நல்ல முன்னோட்டமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>