/* ]]> */
Feb 162018
 

அன்னாசி பேடா- செய்வது எப்படி?

pineapple beda

தேவை:

காய்ச்சிய பால்- 2 தம்ளர்; அன்னாசிப் பழம்-1; பால் பௌடர்-1/2 தம்ளர்; கண்டென்ஸ்டு மில்க்- சர்க்கரை-தலா- கால் தம்ளர்; குங்குமப்பூ-1 தேக்கரண்டி; சிறிதளவு; பாதாம், பிஸ்தா –தலா-10; நெய்-3 தேக்கரண்டி; ஏலப்பொடி-2 தேக்கரண்டி.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில், பால் பௌடர், சர்க்கரையை கட்டி தட்டாமல் கலக்கவும். இதனுடன் பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து, ஜூஸ் மிக்ஸியில் நுரை பொங்க அடிக்கவும். அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி, துண்டுகளாக்கி, விழுதாக்கி அரைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு, அன்னாசி விழுதை மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறவும். அது கெட்டியாக வந்ததும், ஏலப்பொடி தூவி இறக்கவும்.

நெய் தடவிய அகலமான தட்டில், கொட்டி, சற்று ஆறியதும், கை பொறுக்கும் சூட்டில், வட்ட வடிவ பேடாக்கள் செய்து, மேலே குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.

^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>