/* ]]> */
Dec 012014
 

அனிருத் காட்டில் மழை:

ANIRUDH
விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத், தனக்கு முன் இருந்த பல முன்னணி இசையமைப்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார். இதற்குக் காரணம், ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், மற்றும் யுவன் ஷங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் சமீபத்திய பாடல்களைவிட, அனிருத்தின் ‘கத்தி’ படப் பாடல்கள்தான், இப்போதுவரை ஹிட் லிஸ்ட்டில் உள்ளது. இதனால், இதுவரை, ஹைகிளாஸ் இசை கொடுத்து வந்த இசையமைப்பாளர்களும், அடுத்து அனிருத் ரேஞ்சுக்கு இறங்கி அடிகக் முடிவெடுத்திருக்கின்றனர்.
ஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்:

meera nandan
‘வால்மீகி’ படத்தில் நடித்த மீரா நந்தன், தற்போது சரத்குமார் நடிக்கும், ‘சண்ட மாருதம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை. சினிமா வாய்ப்புகள் குறையும் நேரத்தில், ஏதாவது மீடியாக்களில் நிருபராகப் பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனல், தற்போது மணிப்பால் யுனிவர்ஸிட்டியில் தொலைதூரக் கல்வி மூலம் மாஸ்கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படித்து வருவதால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் லட்சுமி மேனனைப் போன்று மீரா நந்தனும், புத்தகமும் கையுமாகத்தான் காட்சி தருகிறார்.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>