/* ]]> */
Dec 122019
 

அத்திப் பழ அல்வா- செய்வது எப்படி?

அத்திப் பழ அல்வா

தேவை:

அத்திப் பழ துண்டு-20; முந்திரி-20; பாதாம், பிஸ்தா-10; சர்க்கரை-1 கப்; நெய்-5 மேஜைக்கரண்டி; ஏலப் பொடி, தண்ணீர் –தேவையான அளவு.

செய்முறை:

முந்திரி, தோல் நீக்கிய பிஸ்தா,அத்திப் பழத் துண்டுகளை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். ஊறியபின் விழுதாக அரைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி, அரைத்த விழுதைச் சேர்க்கவும். அந்தக் கலவையை 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பின் அடுப்பை மெலிதாக எரியவிட்டு, சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி, அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.சுவையான சத்து மிக்க அத்திப்பழ அல்வா தயார். எக்காலத்துக்கும் ஏற்றது. காலை சிற்றுண்டிக்கு சிறுவர் சிறுமியர் விரும்பி உண்பர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>