/* ]]> */
Jul 112017
 

அடை மிக்ஸ்- செய்வது எப்படி?

adai mix

தேவை:

புழுங்கல் அரிசி-2 தம்ளர்; துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி-தலா 1 தம்ளர்; பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு-தலா 4 தேக்கரண்டி; கறிவேப்பிலை- கைப்பிடியளவு; பெருங்காயத்தூள், உப்பு.

செய்முறை:

 கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். பொருட்களை மிக்ஸியில் சற்று சன்ன ரவை போல உடைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையானபோது மாவுடன் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து , தண்ணீரை ஊற்றி மாவை 10 நிமிடம் ஊற வைத்தபின் அடைகளாக வார்க்கவும்.

லட்டு மிக்ஸ்:

laddu mix

தேவை:

பாசிப் பருப்பு, சர்க்கரை- தலா 1 கிலோ; ஏலம்-10.

செய்முறை:

பாசிப் பருப்பு, ஏலத்தை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை லேசாக வறுத்து இறக்கவும். ஆறியதும் சர்க்கரை சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைக்கவும். தேவைப்படும்போது 1 தம்ளர் மாவுடன் 1 கரண்டி நெய் காய்ச்சி ஊற்றி லட்டுகளாக பிடிக்கவும். விரும்பினால், நெய்யில் உடைத்த முந்திரி துண்டுகளையும் சேர்க்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>