/* ]]> */
Sep 012021
 

அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கான காரணங்கள்

கை கால் மரத்தல்

அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கான காரணங்கள்:  நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை கால் மரத்துப் போவது என்பது ஒரு சாதாரண விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால், ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பதுதான் காரணம். அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால், ரத்த ஓட்டங்கள் தடைப்படுவதன் காரணமாக இந்த Numbness Symptoms மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படுகின்றது. குறிப்பாக மரத்துப் போகும் பிரச்சினை என்பது ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை. இன்னும் பல காரணங்களும் இருக்கிறது. அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கான காரணங்கள்:

  1. உடலில் உள்ள உறுப்புகள் மரத்துப் போவது என்பது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்காவது அது நம் மூளை முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சினை என்ற அறிகுறியாகும்.
  2. அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்துப் போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. என்ற அறிகுறியாகும்.
  3. அதுவே ஒருவருக்கு பல ஆன்டுகளாக இந்த மரத்துப் போதல் பிரச்சினை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாகக் கூட இருக்கலாம்.
  4. அதேபோல ஏதேனும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை மற்றும் புற்று நோயைக் குணப்படுத்தும் என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தாலும் கை கால்கள் அடிக்கடி மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படும்.
  5. மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை கல்கள் மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படும்.
  6. உடல் எடை அதிகரித்து அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படுகின்றது.
  7. இந்த மரத்துப் போகும் பிரச்சினையை ஆரம்பத்திலேவ்யே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்துப் போகும் பிரச்சியை சரி செய்துவிட முடியும்.
  8. விட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்தக் கை கால் மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படும். எனவே உடலுக்குத் தேவையான அளவிற்கு விட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
  9. அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த கை கால் மரத்துப் போகும் பிரச்சினை ஏற்படும். தொழுநோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது. எனவே தொழுநோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து  அதற்கான சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிக்கவும்.

10. சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை கால்கள் மரத்துப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களின் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அவர்களது நரம்புகள் பாதிக்கப்படும்

  1. குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்துப் போகும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்
  2. சிலருக்கு தலை ஒருபக்கம் மட்டும் மரத்துப் போய்விடும். அது பக்கவாதத்திற்கான அறிகுறியாகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

*******************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>