அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சி
அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சி, மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறுகூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சிதான் அது.இந்த அனுபவம் பற்றி பில்லா 2 படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான கீசா காம்பக்தீ , எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக வேலை செய்திருக்கிறேன் ஆனால், இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியிலும் வியப்பிலும் உறைய வைத்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது.
இதற்கு முன்பே பில்லா 2 திரைப்படத்தின் டிரைலருக்கு இணையத்தில் யாரும் எதிர்பாராத அளவில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும்அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில் ரசிகர்களை கவர்ந்தது அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சிகள்தான்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments