/* ]]> */
Jul 262011
 

சீனாவின் ஷாங்காய் பல்கலைகழகத்தில் மேற்படிப்பை முடித்த டாக்டர் எம்.என் .சங்கர் , அக்குபங்சர் மருத்துவத்தில் இருபது ஆண்டுகள் அனுபவமுள்ள மிகச்சிலரில் முதன்மையானவர். இவருக்கு பாரத் ஜோதி, சேவா ரத்னா பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தால் கி.பி. 2000 த்தில் புகழ்பெற்ற 2000 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..அமெரிக்க பல்கலைகழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற இவரின் தாரக மந்திரம் நோய்நாடி நோய் முதல் நாடி….சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவருடைய மருத்துவமனையில் அவரை சந்தித்த போது பதிந்த அவருடனான பேட்டி…

1.கேள்வி:வணக்கம் டாக்டர்.. அகுபங்சர் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு விரிவான அறிமுகம்?

பதில்: வணக்கம் ஷஹி…

“அயம் மி ஹஸ்தோ பஹவான்

அயம் மி பஹவாட்டாரா

அயம் மி தன்னோ பிஸ்ஸிஸா

அயம் மி ஸூவாபி மாஸ்யானா “-

இந்த ரிக் வேத சுலோகமானது, மிகுந்த முக்கியத்துவமுடைய உங்கள் கரத்திலுள்ள சில ரகசிய புள்ளிகளில் அழுத்தம் கொடுத்தே பல்வேறு நோய்களையும் குணப்படுத்தலாம் என விளக்குகிறது. பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து பிரபஞ்ச சக்தியை (காஸ்மிக்) குறிப்பிட்ட மர்ம புள்ளிகளில் கிரகிக்கும் போது உடல் , உள்ளம் , ஆன்மா புத்துணர்வு பெறுகிறது. திராவிட நாட்டில் வாழ்ந்த 18 சித்தர்களில் , போகர் இந்த பொன்னூசி வைத்திய முறையில் கைதேர்ந்த வல்லுனராவார்.

அகுபிரஷர் மூன்று வழிகளில் பயனளிக்கிறது . 1. நோய் வருமுன் தடுக்கிறது 2. ஆரம்பகட்ட சரியான நோயறிதல் 3. நோயை குணப்படுத்துகிறது

2.கேள்வி:நவீன மருத்துவத்துக்கும் அகுபங்சருக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?

பதில்:ஒரு நோயாளி குறிப்பிட்ட இடத்தில் வலிப்பதாகக் கூறினால் நோய் அங்கேதான் இருப்பதாக நவீன மருத்துவம் நம்புகிறது. அக்குபங்சர் சித்தாந்தப்படி நோய்க்கும் நோயாளி கட்டும் இடத்திற்கும் சம்பந்தமே கிடையாது. உதாரணமாக

1. வயிறும் மண்ணீரலும் சோர்வுறும் போது இடுப்பு, விலாப்பகுதியில் வலி தோன்றுகிறது .

2. முன்வழுக்கை, காது வலி, இரைச்சல் , மூட்டுவலி இருக்கிறது என்றால் கிட்னி சோர்வடைந்துள்ளது என்று அர்த்தம்.

3. கழுத்துவலி, பிடரி வலி, அடிமுதுகுத்தண்டு வலி, இடுப்பில் ஆரம்பித்து பின் தொடை வழியாக கால் வரை பரவும் வலி போன்றவைக்குக் காரணம்  சிறுநீர்ப்பை சக்தியோட்டத்தில் ஏற்பட்ட சோர்வு தான்.

4. கண்வலி, கண்ணெரிச்சல், தலை வலி, தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்த கல்லீரலின் சக்திப்புள்ளிகளைத் தூண்டினாலே போதும்.

5. தோள்பட்டை வலிக்குக் காரணம் நுரையீரலின் பலவீனம்.

6. இதய சக்தி முழங்கைக்கு வலுவூட்டுகிறது. முழங்கை வலி இதயம் பலவீனமாகி வருவதைக் காட்டுகிறது.

வலி மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. அதோடு கூடவே குடற்புண் முதல் நரம்புத்தளர்ச்சி வரை பல்வேறு பின்விளைவுகளையும் விலைக்கு வாங்குகிறோம். நாளடைவில் சம்பந்தப்பட்ட உறுப்பின் பாதிப்பு அதிகரித்தவுடன் அவ்வுறுப்பையே எடுத்து விட பரிந்துரைக்கப் படுகிறோம்.

3.கேள்வி:மருந்தில்லா மருத்துவம் அகுபங்சர் எனப்படுகிறது..இது குறித்து?

பதில்:நம் நாட்டில் நோயாளிக்கு ஊசி போட்டால் தான் நல்ல டாக்டர் என எண்ணுவது ஆபத்தான அறியாமை. இயற்கை நோயெதிர்ப்பு சக்திக் கவசமானது நமது சித்தர்களின் தத்துவப்படி முள்ளை முள்ளால் எடுப்பது தான். உதாரணமாக பழங்குடி நரிக்குறவ இனத்தாருக்கு உள்ள எதிர்ப்பு சக்தியானது மற்ற நவீன மனிதனை விட அதிகம் என்று சொல்லப்படுவதன் காரணம் இயற்கையோடு ஒத்துப் போவதால் உருவாகும் கவசமேயாகும் (ACQUIRED IMMUNITY). இந்த இயற்கை கவசத்தை நாம் சிதைத்துக் கொள்வதால் தான் பல நோய்களுக்கு ஆளாகிறோம். நம் உடலிலுள்ள இயற்கை சுயசார்பு நிலை ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை காக்கிறது . இதையே நம் சித்தர்கள், மனித உடலே இறைவன் குடி கொண்ட ஆலயம் என்கிறார்கள். ஐம்பூதங்கள் நம் உடலுறுப்புகளை பிரதிபலிக்கின்றன. மரம்- கல்லீரல், பித்தப்ப்பை நெருப்பு- சிறுகுடல், இருதயம் பூமி- வயிறு, மண்ணீரல் உலோகம்- நுரையீரல், பெருங்குடல் நீர்- சிறுநீரகம், சிறுநீர்ப்பை.

4.கேள்வி: இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சர்க்கரை நோய் பற்றி ?

பதில்: ஸ்வாதிஸ்தானம் என்றழைக்கப்படும் கணையம் இன்சுலினை சுரக்கச் செய்கிறது. நவீன உலகில் அதிகளவு செயற்கை சர்க்கரை (white poison) உபயோகிப்பதாலும், உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் விழுங்குவதாலும் இச்சுரப்பியின் செயற்பாடு பாதிக்கப்பட்டு அனேக மக்களுக்கு இனிப்பு நோய் உருவாகிவிடுகிறது! ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ‘எனும் பொன்மொழியை மதித்து மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு உணவில் உள்ள சர்க்கரை சத்தானது உமிழ் நீராலேயே நன்றாக ஜீரணிக்கப்படுகிறது. கணையம் எக்காலத்திலேயும் இவர்களுக்கு பாதிக்கப்படுவதில்லை. மேலும் அதிகளவு கணைய நீர் சுரக்கும் போது குறை ரத்த அழுத்தம் , ஒரு பக்கத் தலைவலி, இனிப்புப் பண்டங்களில் விருப்பம் ,சிலரை குடி அடிமையாக்குதல் போன்றவை உருவாகும்.

5.கேள்வி: அப்படியென்றால் இயற்கையாக நம் உடலை நலமாக வைத்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம்?

பதில்: காலகாலமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் தியானிக்கும் போது கை விரல்களால் ஜப மாலை வைத்து உருட்டுவது , பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளை தூண்டிவிடத்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கும்! நாம் கட்டைவிரல் நுனியிலுள்ள அகுபிரஷர் புள்ளிகளோடு உள்ளங்கை , புறங்கை , விரல்கள் அனைத்தையும் தினமும் 5 நிமிடம் விட்டு விட்டு அழுத்தி வர இச்சுரப்பிகள் தூண்டி விடப்பட்டு சமநிலையடைகிறது !

குழந்தைகளுக்கு இத்துடன் கூடுதலாக நடுவிரல், மோதிரவிரலுக்கு ஒரு அங்குலம் கீழே உள்ளங்கை , உள்ளங்கால்களில் சிறு அழுத்தம் கொடுத்து வர தைமஸ் சுரப்பி நன்கு தூண்டிவிடப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்படுகிறது. தினசரி இவ்வாறு காலை, மாலை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செய்து வர எண்ணற்ற நோய்களைக் களைவதோடு , வருமுன் தடுக்கிறீர்கள்!

“அகுபிரஷர் மட்டுமே உடல்நோய்களை வராமல் தடுக்கவும் வந்ததை அறியவும், அறிந்ததை குணப்படுத்தவும் உதவும் ஒரு முழுமையான ,எளிமையான மருத்துவ முறை!”

அகுபங்சர் மற்றும் அகுபிரஷர் பற்றின நம் மற்ற கேள்விகளுக்கு டாக்டர் சங்கரின் பதில்கள் அடுத்த பதிவுகளில்…..

…ஷஹி…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>