Feb 052020
ஃப்ரூட் ஜாம் கேக் –செய்வது எப்படி?
தேவை:
மைதா, பால்- தலா-1 தம்ளர்; பொடித்த சர்க்கரை- 4 தேக்கரண்டி; ஃப்ரூட் ஜாம்-3 தேக்கரண்டி; கோக்கோ பௌடர், வெஜிடபில் ஆயில்- தலா 2 தேக்கரண்டி, பேக்கிங் பௌடர்- 1 தேக்கரண்டி.
செய்முறை:
மைக்ரோ வேவ் பௌலில் மைதா, கோக்கோ பௌடர்,சர்க்கரை, பேகிங்க் பௌடரைக் கலந்து, பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
அதில் எண்ணெயைக் கலந்து மைக்ரோ வேவில் 1 நிமிடம் வேக வைத்து எடுக்கவும் அதன்மேல், ஃப்ரூட் ஜாம் தடவி 30 வினாடி வேக விடவும்.
குழந்தைகளும் விரும்பும் ஃப்ரூட் ஜாம் கேக் ரெடி.
*****************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments