/* ]]> */
Dec 072011
 

facebook + google plus

ஃபேஸ்புல் கூகுள் ப்ளஸ்


ஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் போன்ற சமூக தளங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது கவலை அளிக்கிறது. இந்தியா அமெரிக்கா இல்லை என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கவலை தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் கூகுள் ப்ள்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில்,பல சமூகங்கள் வாழும் இந்தியாவில் மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெறுவது கவலை அளிக்கிறது. சம்பந்தபட்ட நிறுவனங்கள், சுய தணிக்கை முறையை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், இதுகுறித்து அரசு விரிவாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை இந்திய தகவல் தொடர்பு துறையால் எடுக்கப்படும்’என, மத்திய அரசு அமைச்சர் கபில் சிபல் எச்சரித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் : பேஸ்புக், கூகுள் போன்ற சில சமூக வலைத் தளங்களில் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலான செய்திகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய சமுதாயத்தை கொண்ட நாட்டில்,  இது மாதிரி சர்ச்சைக்குரிய விஷ்யங்கள் ஒரு சமுதாய தளத்தில் இருப்பது மத உண்ர்வுகளை புண்படுத்தி சமுதாய அமைதியை சீர்குலைக்கும். எனவே, இந்த நிறுவனங்கள், இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன், சுய தணிக்கை முறையை செயல்படுத்தவேண்டும். இதற்காக, மீடியா சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுகிறோம் என கூறக் கூடாது.  இதுகுறித்து சமீபத்தில் யாகூ, பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து, அரசின் கவலையை தெரிவித்தோம். அப்போது,இந்த நிறுவனங்கள் இதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கிறோம் என, கூறிச் சென்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக இதற்காக எந்த உறுதியையும் அவர்கள் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறை, இங்கு பின்பற்றப்படுவதாக, அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள சமுதாய அமைப்பு வேறு, இங்குள்ள சமுதாய அமைப்பு வேறு என்பதை, ஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் உணர வேண்டும். இதை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது. இதே நிலை தொடருவதை ஏற்க முடியாது. சம்பந்தபட்ட நிறுவனங்கள், உணர்வுப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதில் சுய தணிக்கை முறையை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், இதுகுறித்துவிரிவாக ஆலோசித்து, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். சமுதாய தளங்களுக்கென்றே, சில வழிகாட்டும் விதிமுறைகள் உருவாக்கப்படும். சம்பந்தபட்ட தகவல், எங்கிருந்து, யாரால் வெளியிடப்பட்டது என்பது பற்றிய விவரங்கள், வலைத்தள நிறுவனங்களிடம் கேட்கப்படும். குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த விதிமுறைகளில் வழி வகுக்கப்படும்.

மேலும் ஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் போன்ற சமுதாய தளங்களை சில வன்முறையாளர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. பயங்கரவாதிகள், மின்னஞ்சல் மூலமாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, அதுகுறித்த தகவல்களை கேட்டால், சில இணைய நிறுவனங்கள், அவற்றை தரத் தயங்குகின்றன. மேலும், சில நிறுவனங்கள் கோர்ட்டை நாடுகின்றன. இது சரியான முறை அல்ல. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இந்த அரசு சும்மா இருக்க முடியாது. நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.

ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ் , யாஹூ போன்ற சமுதாய தளங்கள் அரசின் புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வில்லையெனில் அரசு ஃபேஸ்புக் , கூகுள் ப்ளஸ் போன்ற சமுதாய தளங்களை தடை செய்யுமா எனக் கேட்ட போது கபில் சிபல் “இப்போதைக்கு, அவை அரசின் ஆலோசனையை ஏற்று சுய தணிக்கை முறையை கொண்டு வந்து அரசுடன் ஒத்துழைக்கும் என்றே நம்புவோம்” என தெரிவித்தார்.

tags : ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ஃபேஸ்புக் + கூகுள் ப்ளஸ், யாஹூ, கூகுள், சமுதாய வலை தளங்கள், ஃபேஸ்புக் சாட், ஆர்கூட், ஆர்குட், கூகிள் ப்ளஸ், கூகிள், அரசு தடை, கபில் சிபல், இந்திய அரசு,  facebook, google plus, facebook + google plus, social websites, social forum, chat, kapil sibal

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>