/* ]]> */
Dec 082011
 

ஃபிகர் மடக்குவது எப்படி ? ப்ரபோஸ் பண்ணக் கூடாத நாலு முறைகள்

ஃபிகர் மடக்குவது எப்படி

வணக்கம்ணா ! இன்னாடா இவன் ஃபிகர் மடக்குஇவது எப்படி தொடர பண்டலு கட்டிக்கினான். இப்டி டபால்கு எயுதுறானான்னு யோசிச்சிக்கினியா , அது ஒண்ணியும் இல்ல, நான் ஃபிகர் மடக்குவது எப்படி தொடர் எயுத ஆரம்பிச்சோன்ன, அல்லா பசங்களும் இதே டைப்புல பெண் மனதை கவருவது எப்படி? பெண்ணை காதலிப்பது எப்படி? ஸ்டைல்ல எயுத ஆரம்பிச்சாங்க. சரி விஷயம் தெரிஞ்சவங்க இருக்க சொல்லோ இந்த குப்பு ஏன் எயுதணும்னு நான் “தமிழ் சினிமா புறக்கணித்த சூப்பர் ஃபிகர்கள்” மாதிரி சமுதாயத்துக்கு உபயோகமான விஷயமா எயுத போனேன். ஆனா அப்பாலதான் கவனிச்சேன், இந்த பசங்க அல்லாருமே எயுதறது ஆங்கில ஆர்டிக்கிள அப்படியே உல்டா பண்ணி ! ஒரு தமிழன் தமிழ் ஃபிகர கரக்ட் பண்ண இன்னாத்துக்கு இங்கிலீஷுக்காரனாண்ட கேக்கணும்னு என் தமிழுணர்வு தூண்டி விட்டதால சொந்த சரக்க வச்சி ஃபிகருங்களப் பத்தி எயுதலாமனு திரும்பவும் வந்திருக்குறேன் இந்தக் குப்பு !

மொதல்ல, இதுவரைக்கும் இன்னன்னா பார்த்தோம்னு ஒரு ரிவிஷன் உட்டுக்கலாமா? ( இன்னா கிளாசாடா எடுக்குறேன்னு கோவப்படுற மக்கள்லாம் ஒரு டம்ளர் தண்ணி குடுச்சுட்டு வாங்க )

# ஃபிகர் மடக்குவது எப்படி?- 1 -

# ஃபிகருக்கு என்ன பிடிக்கும் – ஃபிகர் மடக்குவது எப்படி? – 2

# ஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்

# ஃபிகர் மடக்குவது எப்படி -4 – க்ளீசரின் ஃபிகர்ஸ்

#ஃபிகர் மடக்குவது எப்படி -5 -சேஃபிடி ஃபிகர்ஸ்

#ஃபிகர் மடக்குவது எப்படி – மஃப்டி ஃபிகர்ஸ் – உஷார் பார்டிங்க

அப்படின்னு ஃபிகர் மடக்குறதுன்னா இன்னா? ஏன் நாம ஒண்ணு நினைக்குறோம் ஃபிகர் ஒண்ணு நினைக்குது? ஃபிகர்ல எப்படி க்ளிசைன் ஃபிகர், சேஃப்டி ஃபிகர், மஃப்டி ஃபிகர்னெல்லாம் டிஃபரண்ட் டைப்பு இருக்குதுன்றத நாம பார்த்தோம்… ஓகே ஃபிகராண்ட நெருங்கி எப்டி ஃபிகர் கூட ஃப்ரண்டாகறதுன்னு பார்த்தோம்…

இப்ப எப்டி ஃபிகராண்ட ப்ரபோஸ் பண்றதுன்றதுதான் அடுத்த கட்டம்…

அதுக்குப் போறதுக்கு மின்னால , இன்னால்லாம் பண்ணக் கூடாதுன்றத மொதல்ல பார்ப்போம்…

1. நோ லவ் லெட்டர் நண்பா :

அந்நியன் படத்து பாட்டுல ஒரு டக்கரான ஒரு லைன் வரும்

“ஆண்டவன் விடவும் தைரியம் உள்ளவன் பூமியில் உள்ளான் எவன்

பெண் கண்களைப் பார்த்து தைரியமாக காதலைச் சொல்லும் அவன் “

அப்டிம்பாங்க… ஃபிகருக்கும் “இன்னாடா இவன் , சப்ப , மேட்டரு இத்த சொல்றதுக்கே லெட்டர் எயுதறானேன்னு இருக்கும். டம்மி பீசு போலன்னு நம்ம நெனச்சுடும் . அதால,  லெட்டர் குடுக்குற ஐடியா இருந்தா, அத்த அப்டியே விட்டுடு நண்பா ! உன் தில்ல ஃபிகரு புரிஞ்சுக்க வேணாவா ?

2. நோ தூது : ப்ரபோஸ் பண்ண சொல்லோ , உன் ஃப்ரண்ட தூது விடாதே ( அரவிந்தசாமி அப்படித்தான் கஜோல கரக்ட் பண்ண பிரபுதேவாவ அனுப்புவாரு மின்சார கனவுல… இன்னா ஆவும்? பிரபுதேவா ஃபிகர கரக்ட் பண்ணிடுவாரு… அன்னிக்கு அடுத்தவன் லவ்வர கரக்ட் பண்ண பிரபுதேவா இன்னிக்கு வரக்கும் கரக்டு பண்ணிக்க்கிட்டே இருக்காரே எப்டின்னு கேக்குறியா? அதெல்லாம் தனி தொடரா போடணூம் )

அதால, உன் ஃப்ரண்ட தூது அனுப்புற வேலையெல்லாம் வேணாம்.

அதே போல ஃபிகரு ஃப்ரண்ட கூப்பிட்டு அது மூலமா உன் காதல சொல்லுறதும் வேணாம் தலவா ! என் ஃப்ரண்டு இப்டித்தான் ஃபிகரு ஃப்ரண்ட தூது விட்டான், தன் லவ்வ சொல்ல! மறுநாள் ஃப்கரோட அப்பா வந்துட்டாரு! இன்னாடான்னு பார்த்தா, அந்த ஃப்ரண்டு ஃபிகரோட கசினாம். உறவுக்காரப் பொண்ணு. நேரா போய் ஃபிகரோட அப்பா கிட்ட சொல்லிடிச்சி… இது தேவையா நண்பா ! அதோட இது மாதிரி மேட்டருல்லாம், கான்ஃபிடல்ஷியலா வச்சிக்கத்தான் ஃபிகரு நெனக்கும். நீ அத்தப் போய் இன்னொருத்தர் கிட்ட சொல்றது அவ்வளவா ஃபிகருக்கு புடிக்காது.

3. பப்ளில் பிளெசுல ப்ரபோஸ் பண்ணக் கூடாது !

ஆமாம் நண்பா, இந்தப் படத்துலயெல்லாம் காட்டுனாங்களே , மைக் செட்டுல போய் அனௌன்ஸ் பண்றது, காலேஜ் பிரேயர் ஹால்ல சொல்றது, எஃப்.எம் ரேடியோல சொல்றது, இதெல்லாம் பண்ணீன்னாக்க உன் லவ்வுக்கு நீயே சமாதி கட்டுறேன்னு அர்த்தம் தலிவா! அதெல்லாம் படத்துலதான் ஒர்க் அவுட் ஆகும். நெஜத்துல நடக்காது ! அதனால் ப்ரபோஸ் பண்றதுக்கு கொஞ்சம் கூட்டம் இல்லாத இடமா தேர்ந்தெடுத்துக்க ( பார்க் பீச்சு ஓகே தலிவா ! பட் கான்வர்சேஷன் ப்ரைவேட்டா இருக்கணும் )

4. ப்ரபோசல்ல கிண்டல் கேலி வாணாம் : ப்ரபோஸ் பண்ண சொல்லோ கிண்டல் கேலி இல்லாம பண்ணு தலிவா ! உனுக்கு பிடிக்கலேன்னா இந்த லெட்டர தங்கச்சி கிட்ட கொடுன்னெல்லாம் எயுதாத ! சீரியசா லைஃபை டிசைட் பண்ற விஷ்யத்துல உன் நக்கல் சென்ச காட்டி காமெடி டைமாக்காதே ! உன் மனசுல உண்மையா ஃபிகரப் பத்தி இன்னா நெனக்குறயோ அத்த சொல்லு.

tags : figure madakkuvathu eppadi, tamil dating tips, tamil dating, how to date a tamil girl, how to propose in tamil, love tips in tamil, romance tips in tamil, ஃபிகர் மடக்குவது எப்படி?, ஃபிகர் மடக்குவது எப்படி, ஃபிகர், பெண்ணை மடக்குவது எப்படி, பெண்ணைக் கவருவது எப்படி, காதல் டிப்ஸ், ப்ரபோஸ் செய்வது எப்படி, பெண் மனது, பெண்ணை புரிந்து கொள்வது எப்படி, டேடிங் டிப்ஸ், ரொமான்ஸ் டிப்ஸ், ரொமான்ஸ், காதல்,லவ் லெட்டர், காதல் கடிதம், காதல் லெட்டர், லவ், லவ்வர்,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>