/* ]]> */
May 042011
 
சிம்பு நயன்

சிம்பு நயன்

 

ஃபிகர் மடக்குவது எப்படி ? – 6 – மஃப்டி ஃபிகர்ஸ் – உஷார் பார்டிங்க

 

வணக்கம் தலிவா ? நானும் மாசத்துக்கு ஒரு ஃபிகர் டிப்ஸாவது எயுதணும்னுதான் பாக்குறேன் ஆனா எதுனா ஒரு ஃபிகர் அந்தந்த மாசம் பிக்கப்பாயி நான் பிசியா ஆயிடுறேன் ஹி ஹி.. சரி மேட்டருக்கு வருவோம் … இதுவர நாம் இன்னா இன்னா பாத்துக்குறோம்னு முதல்ல பார்ப்போம்…

 

[stextbox id="alert"]

முந்தய பகுதிகள்

# ஃபிகர் மடக்குவது எப்படி?- 1

# ஃபிகருக்கு என்ன பிடிக்கும் – ஃபிகர் மடக்குவது எப்படி? – 2

# ஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்

# ஃபிகர் மடக்குவது எப்படி -4 – க்ளீசரின் ஃபிகர்ஸ்

#ஃபிகர் மடக்குவது எப்படி -5 -சேஃபிடி ஃபிகர்ஸ்

 

[/stextbox]

ஓகே… அடுத்ததா நாம் பாக்கப்போறது மஃப்டி ஃபிகர்ஸ் அது  இன்னா மஃப்டி ? போலீசு கலர் ட்ரஸ் போட்டா நாம இன்னா சொல்லுவோம்? மஃப்டில வந்துக்குறாரு பாரு மாமா ன்னுவோம்… அதே ஒரு கலரு ( ஃபிகரு) உருவுல ஒரு போலீஸ் மூளையுள்ள சந்தேக கேஸ் வந்தா அத்த இன்னா சொல்லுறது… அத்ததான் நாம மஃப்டி ஃபிகர்ஸ்சுண்ட்றோம்…  புரிஞ்சுதா? ஆமா தலைவா சதா சந்தேகப்பட்டுக்கிட்டு நம்மள போலீஸ் மாதிரி கேள்வி கேட்டுக்கினே இருக்குதே அதே ஃபிகர்தான்….

ஃபோன் என்கேஜ்டா இருந்தா எவ கூட பேசிட்டுருந்தன்னு கேக்கும்… ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தா எவ கூட இருந்தன்னு கேக்கும்… ஃபோன் கிடைச்சுட்டா என்ன ஏமாத்தா வேற சிம் எடுத்தட்டயான்னு கேக்கும்… ஆக மொத்தம் கேள்வி கேட்டுக்கினே இருக்கும்.. நம்ம மூமென்ட்ஸ் எல்லாத்தையும் உஷாரா கவனிக்கும்… நாம கொஞ்சம் நூலு உடலாம்னு நினைச்சா கூட மாஞ்சாவையே எடுத்துடும்… இதப்போல உஷார் பார்டிங்கள உஷார் பண்றது எப்படின்றதுதான் இப்ப  டிஸ்கஸ் பண்ணப் போறோம்…

இந்த மாதிரி ஃபிகர்ச முதல்ல எதுக்கு மடக்கணும்… தானே தலவலிய தவுசன்ட் ரூபா நோட்டு கொடுத்து வாங்கணும்…அப்படின்றதுதான் குறும்பு குப்பு பாலிசி… ஆனா அந்த மாதிரி ஃபிகரக்கூட மடக்கியே ஆகணும் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டே ஆகணும்னு நினைக்குற நம்ம பார்டிங்களுக்காகத்தான் இந்த சேப்டர்…

முதல்ல இந்த மஃப்டி ஃபிகர்ச டீல் பண்றதப் பத்தி புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால இந்த ஃபிகர் ஏன் இப்படி ஆச்சுன்னு புரிஞ்சுக்கணும் ..

எல்லாம் முன் அனுபவம்தான் தலைவா… பயப்படாதீங்க முன் அனுபவம்னா அந்த ஃபிகரே அனுபவப்பட்டிருக்கும்னு இல்ல… அவங்க அக்காவா கூட இருக்கலாம்… இல்ல அந்த ஃபிகரப் பாத்த சினிமாவா கூட இருக்கலாம்.. அதுல நயனுக்கு சிம்பு அல்வா கொடுத்திருக்கலாம் அதப்பாத்து நம்ம ஃபிகர் எல்லா ஆம்பளங்களயும் அல்வா கொடுக்கற சிம்புங்களா நினைக்கலாம் … உண்மையில நயன் தான் சிம்புக்கு அல்வா கொடுத்தாங்க  அது உனுக்கு தெரியும் எனுக்கு தெரியும் ஆனா நம்ம ஃபிகருக்கு தெரியாது பாத்த சினிமாவே நிஜம்னு நம்பும்… பக்கத்துல நிஜமா நின்னா கூட இவன் நமக்கு படம் காட்டறானோன்னு நினைக்கும்…

இந்த மாதிரி ஃபிகர எப்படி டீல் பண்ணனும்…

யானைக்கு தும்பிக்கைன்னா மனுஷனுக்கு நம்பிக்கைதான தலைவா அதனால இந்த மாதிரி ஃபிகர டீல் பண்ண நிறைய பொறுமை வேணும்… பொறுமையோட பக்குவத்தோட அந்த ஃபிகர் மனசுல நம்பிக்கைய வளக்கணும்…

ஃபிகர் நம்மள் பண்ற என்கொயரில டென்ஷனாவாம ஒரு குழந்தைக்கு சொல்ற மாதிரி ஃபிகருக்கு பொறுமையா எடுத்து சொல்லணும்…

நாம தான் நிஜம்னு ப்ரூவ் பண்ணனும்…

ஃபிகர் நம்மள சந்தேகப்படும்போது நாம கஷ்டப்படுறோம்கறத ஃபிகருக்கு உணர வைக்கணும் அதே சமயத்துல ஃபிகருக்கிட்ட இத வச்சு சண்டைக்கு நிக்க கூடாது. நாம கஷ்டப்படுறதப் பாத்து ஃபிகர் மெல்ல மெல்ல போலீசுலேர்ந்து பொக்கிஷமா மாறும் !

எப்பவுமே ஒண்ணு ஞாபகம் வச்சுக்க தலீவா… சந்தேகப்படுற ஃபிகர் பொஸஸிவ்….

எந்த ஃபிகர் ரொம்ப பாசமா இருக்கோ அதுதான் பொஸஸிவா இருக்கும் அதுனால

அந்தப் பாசமான மஃப்டி ஃபிகர உன்னோட பொறுமையால கரக்ட் பண்ணு தலைவா லைஃப் நல்லா இருக்கும்

இனி வரப்போற பார்டுல ஃபிகர்ட எப்படி ப்ரபோஸ் பண்ணலாம்னு பார்ப்போம்… வரட்டா தலைவா.. லேட்டாச்சுன்னா நம்ம  மஃப்டி ஃபிகர் எங்க போன்னன்னு கேள்வி கேட்கும்… ஹி ஹி !

Tags : ஃபிகர் மடக்குவது எப்படி,பெண்களை மனம் கவர வழிகள், டேட்டிங்க், ஃபிகர், லவ், லவ்வர், மஃப்டி ஃபிகர், டேட்டிங்க், நயன், சிம்பு, டேட்டிங்க், சேட்டிங்க்,  Dating, love, tamil love tips, love tips in tamil, dating tips in tamil, tamil dating, womens mind

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>